பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த் 4-ம் கட்ட கடல் ஒத்திகை நிறைவு
Posted On:
10 JUL 2022 7:07PM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த், 4-ம் கட்ட கடல் ஒத்திகையை 10 ஜுலை, 2022 அன்று நிறைவு செய்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, பல்வேறு சாதனங்கள் மற்றும் விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்தக் கப்பலை, 2022 ஜுலை இறுதியில் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், ‘சுதந்திர தின அமிர்தப் பெருவிழா‘-வை நினைவுகூறும் விதமாக, இந்தக் கப்பல் ஆகஸ்ட் 22 அன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்த விமானந்தாங்கிக் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல்கட்டும் தளம் ஆகியவை உள்நாட்டிலேயே வடிவமைத்து, 76% உள்நாட்டு பாகங்களைக் கொண்டு கட்டியிருப்பது, ‘தற்சார்பு இந்தியா‘ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்‘ என்ற நாட்டின் முன்முயற்சிக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தக் கப்பல் கட்டும் பணியின் மூலம், கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் 2000-க்கும் மேற்பட்டோருக்கும், உதிரிபாகத் தொழிற்சாலைகளில் சுமார் 12,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை, ஆகஸ்ட் 2021-ல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகைகள், முறையே அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 2022-ல் நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840608
***
(Release ID: 1840638)
Visitor Counter : 291