பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

“நல்லாட்சி நடத்துவதற்கு, குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்கம் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல்“ என்று தலைப்பிலான இரண்டு நாள் மண்டல மாநாடு, பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது

Posted On: 10 JUL 2022 3:58PM by PIB Chennai

“நல்லாட்சி நடத்துவதற்கு, குடிமக்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்கம் இடையே நெருக்கத்தை ஏற்படுத்துதல்“  என்று தலைப்பிலான இரண்டு நாள் மண்டல மாநாடு, பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.   இந்த மண்டல மாநாட்டிற்கு, மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத்துறை, கர்நாடக அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.  

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை ஆகியோர், 12-ந் தேதியன்று இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.  

மத்திய, மாநில, மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தங்கள் வாயிலாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    டிஜிட்டல் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைத் தொடருதல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுடன்,  “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை“ என்ற கொள்கைக் குறிக்கோளுடன், செயல்படுவதற்கு, இந்த நெருக்கம் வழிவகுக்கும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840578

 

*******



(Release ID: 1840619) Visitor Counter : 176