குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
09 JUL 2022 6:54PM by PIB Chennai
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு -
“ ‘பக்ரீத்‘ நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள்.
வழக்கமான உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, தியாகம் மற்றும் இறைவன் மீதான அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.
பகிர்ந்து உண்ணுதல் மற்றும் ஏழைகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதையும் இந்நாள் உணர்த்துகிறது.
மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை இந்தப் பண்டிகை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன்.
பக்ரீத் பண்டிகையுடன் தொடர்புடைய உன்னத இலட்சியங்கள் நம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி, நாட்டிற்கு வளம் சேர்க்கட்டும்“ .
***
(रिलीज़ आईडी: 1840433)
आगंतुक पटल : 227