தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவிற்கான செயல்திட்டம் குறித்து வழிகாட்டும் குழு ஆலோசனை
प्रविष्टि तिथि:
08 JUL 2022 7:14PM by PIB Chennai
உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் ஒரு பொதுவான தளத்தை வழங்குவதை வரும் நவம்பர் 20-28 தேதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்படவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட கலாச்சாரங்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும் உலக சினிமாவைப் பாராட்டுவதற்கும் விழா அனுமதிக்கிறது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.
திரைப்படக் கலையின் சிறப்பை வெளிப்படுத்த உலகத் திரையரங்குகளுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து சில சிறந்த சினிமாப் படைப்புகளை இந்த விழா கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 53வது சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதற்கான வழிகாட்டல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். கோவா மாநில முதலமைச்சர் (இணைத் தலைவர்), தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர், கோவா மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல்சார் உறுப்பினர்களாகவும், திரு. மனோஜ் முன்டாஷிர்,திரு. விபுல் அம்ருத்லால் ஷா,திரு. பிரசூன் ஜோஷி,திரு. பிரியதர்ஷன்,திருமதி குஷ்பு சுந்தர்,செல்வி. ஹ்ரிஷிதா பட், செல்வி. வாணி திரிபாதி,திரு. கரண் ஜோஹர்,திரு. சுக்விந்தர் சிங்,திரு. நிகில் மகாஜன்,திரு. ரவி கொட்டாரக்கரா,திரு. ஷூஜித் சர்கார்,திரு பாபி பேடி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840175
***************
(रिलीज़ आईडी: 1840199)
आगंतुक पटल : 248