அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சோடியம் அயன் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களை வேகமாக சார்ஜ் செய்யும் மின்-சுழற்சி உருவாக்கம்

Posted On: 06 JUL 2022 2:45PM by PIB Chennai

சோடியம்-அயன் அடிப்படையிலான பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களை உருவாக்க விஞ்ஞானிகள் நானோ பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவை விரைவாக சார்ஜ் செய்யப்படுவதுடன், மின் சுழற்சிகளை ஒருங்கிணைக்கக் கூடியவையாகும். சோடியம் அயன் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் விலை மலிவானவை என்பதுடன், மின் சுழற்சிகளின் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோடியம்-அயன் பேட்டரிகள் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக  பயன்படுத்தப்படலாம். இயற்கையில் சோடியம் மிகுதியாக்கிடைக்ககூடியது என்பதால், வணிகரீதியில் அதனைப் பயன்படுத்துவதன் மூலம் செலவு வெகுவாகக்குறையும் என மதிப்பிடப்படுகிறது.

கரக்பூரில் உள்ள ஐஐடியின்  இயற்பியல் துறைப் பேராசிரியர் டாக்டர். அம்ரீஷ் சந்திரா, சோடியம் அயன்  அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகிறார். மேலும் அவரது குழு அதிக எண்ணிக்கையிலான நானோ பொருட்களை உருவாக்கியுள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) தொழில்நுட்ப மிஷன் பிரிவின் (டிஎம்டி) ஆதரவுடன் சோடியம் அயன் அடிப்படையிலான பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களைப் பெறுவதற்காக சோடியம் இரும்பு பாஸ்பேட் மற்றும் சோடியம் மாங்கனீசு பாஸ்பேட்களை குழு பயன்படுத்தியது. இந்த சோடியம் பொருட்கள் ஒரு பேட்டரியை உருவாக்க கார்பனின் பல்வேறு புதிய கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டன.

இந்த சோடியம் பொருட்கள் லித்தியம் அடிப்படையிலான பொருட்களை விட மலிவானவை, அதிக செயல்திறன் கொண்டவையாகும். மேலும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடியவையாகும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839574

***************(Release ID: 1839617) Visitor Counter : 206