சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் 1606 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம்

Posted On: 01 JUL 2022 6:29PM by PIB Chennai

மத்திய சமூகநீதி மற்றும்  அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும், செயற்கை கை,கால்கள் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.  மத்திய சமூகநீதி மற்றும்  அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ஏ. நாராயணசாமி, காணொலி வாயிலாக இந்த முகாமை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஏ. நாராயணசாமி, பிரதமரின் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார். சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குறிப்பாக நலிந்த பிரிவினருக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 1606 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம்  ரூ.1.32 கோடி மதிப்புள்ள பல்வேறு வகையான சாதனங்கள் வழங்கப்பட்டன.  3 சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள், பார்வைதிறன் குறைபாடு உடையவருக்கான சாதனங்கள் மற்றும் செல்போனுடன் கூடிய சாதனங்களும், செயற்கை கை,கால்களும் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1838654

***************



(Release ID: 1838684) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Hindi , Manipuri