ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள், பிஎம் மித்ரா திட்டம் இந்திய ஜவுளித்துறை விரும்பிய இலக்கை, அளவை எட்ட உதவும், உலக சந்தையில் வலுவான போட்டியாளராக உருவாகிறது: திருமதி.ஜர்தோஷ்

Posted On: 30 JUN 2022 3:42PM by PIB Chennai

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மற்றும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை பூங்காக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள ஹலோலில், Avgol Nonwoven-ன் புதிய உற்பத்தி ஆலையை திறந்து வைத்து பேசிய, மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் திருமதி.தர்ஷனா ஜர்தோஷ், நார்ச்சத்திலிருந்து பண்ணை, பண்ணையிலிருந்து துணி, துணியிலிருந்து ஆடை அலங்காரம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில், நார்ச்சத்துக்கான இந்தியாவின் மதிப்பு 26 சதவீதம் என்று அவர் தெரிவித்தார். இந்த அளவை அதிகரிக்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மற்றும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை பூங்காக்கள் ஆகியவை உலக சந்தையில் வலுவான போட்டியை ஏற்படுத்துவதுடன், ஜவுளித்துறை விரும்பிய இலக்கையும், அளவையும் எட்ட உதவும்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1838215

***************


(Release ID: 1838309) Visitor Counter : 159