புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் தினம் இன்று (ஜூன் 29,2022) கொண்டாடப்பட்டது
Posted On:
29 JUN 2022 5:21PM by PIB Chennai
பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மறைந்த பேராசிரியர் பிரசந்த சந்தர மகலனோபிஸ் ஆற்றிய மதிப்புமிகு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான இன்று புள்ளியியல் தினமாக மத்திய அரசால் கொண்டாடப்பட்டது.
புள்ளியியல் தினத்தின் முக்கிய நிகழ்வு புதுதில்லியில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் நடைபெற்றது. 75-வது சுதந்திர கொண்டாட்டத்தின் அமிர்தப் பெருவிழாவையொட்டி புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் துறை அமைச்சகம் சார்பில் ஒரு வாரத்திற்கு இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர் பேராசிரியர் விமல் குமார் ராய், இந்திய புள்ளியியல் கல்வி கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் சங்கமித்ரா பண்டோ பாத்யாய் ஆகியோரும் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பேராசிரியர் பி சி மகலனோபிஸ் தேசிய விருது புள்ளியியல் மற்றும் திட்டமிடல் அமலாக்கத்துறை அமைச்சக துணை தலைமை இயக்குனர் திரு திலிப் குமார் சின்ஹா, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் கே பி சுரேஷ் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
புள்ளியியல் துறையில் வாழ்நாள் பங்களிப்பு செய்தவர்களுக்கான பேராசிரியர் சுகத்மே தேசிய விருது, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் பதம் சிங்கிற்கு அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திலேயே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களும் பாராட்டப்பட்டார்கள்.
***************
(Release ID: 1838030)
Visitor Counter : 233