மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய கல்வித்துறை செயலாளர் அழைப்பு
Posted On:
28 JUN 2022 4:45PM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தை, பாடத்திட்டங்களில் இணைக்கும்படி, மத்திய கல்வித்துறை செயலாளர் திரு. சஞ்சய் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இந்த காலத்தில், இந்திய அரசின் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை கல்வி நிறுவனங்கள் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார். மேலும், ஆராய்ச்சிகள் மூலம், சிறந்த கல்வி பரவல், சரக்குப் போக்குவரத்து தளவாடங்கள், உள்கட்டமைப்புத் துறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதில் கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் கூறினார். கல்வி அமைச்சகம், பாஸ்கராச்சார்யா நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் ஆகியவற்றுடன் மும்பை நிட்டி ஏற்பாடு செய்திருந்த, நகர்ப்புற திட்டமிடலுக்கான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, புவி-தகவல் மற்றும் புவிசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் என்ற இணையவழி கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837613
***************
(Release ID: 1837676)
Visitor Counter : 199