மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

இந்திய வனத்துறை பணிக்கான தேர்வு -2021 முடிவுகள் வெளியீடு

प्रविष्टि तिथि: 28 JUN 2022 4:05PM by PIB Chennai

இந்திய வனத்துறை பணிக்கான தேர்வு 2021 முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி  வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடைபெற்றது. நேர்முகத் தேர்வு இந்தமாதம் (ஜூன் மாதம்) நடைபெற்றது. இதையடுத்து இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மொத்தம் 108 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 30 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 14 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 பேரும், எஸ்சி வகுப்பைச்சேர்ந்த 16 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 பேரும் அடங்குவர். தேர்வு முடிவுகளை  www.upsc.gov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சிப் பெற்றவர்களின் மதிப்பெண்கள் குறித்த விவரம், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விரைவில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திகுறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837597

 

***************


(रिलीज़ आईडी: 1837668) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi