பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை மூலம் ஓய்வூதியதாரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியி்ல் நடைபெற்றது
Posted On:
28 JUN 2022 3:06PM by PIB Chennai
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை மூலம் ஓய்வூதியதாரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியி்ல் இன்று நடைபெற்றது. கொவிட் பாதிப்பு காலத்திற்கு பிறகு நாட்டின் தென் பிராந்தியத்தில் நேரடியாக முதன் முதலாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சென்னை, புதுச்சேரியைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.
ஓய்வூதிய தொகை கொள்கை சீர்திருத்தங்கள், வருமானவரி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஓய்வூதியம் மற்றும் செயல்முறைகளின் பல்வேறு திருத்தங்கள் தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன், ஓய்வூதியதாரர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டது.
***************
(Release ID: 1837592)