தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திரையிட்டது
Posted On:
27 JUN 2022 12:56PM by PIB Chennai
வெளியாகவுள்ள 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படத்தி்ன் சிறப்புக் காட்சியை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில், திரையிட்டது. இந்த சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆர்.மாதவன் தலைமையிலான ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் கலந்து கொண்டனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.மாதவன், இந்த படத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். படத்தின் சிறப்பு திரையிடலில், சிபிஐயின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி திரு.பி.எம்.நாயர், அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். சிறந்த திரைக்கதை, நடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றுடன் திரு.நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக, பார்வையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.ஆர்.மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்று கூறினார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய திரு.நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் உள்ளது.
வெளிவரவுள்ள 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' திரைப்படம், உளவு பார்த்ததாக 1994-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட, மூத்த விஞ்ஞானியும், விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான திரு.நம்பி நாராயணனின் வாழ்க்கையின் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம். 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' 75-வது கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. விழாவில் பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் செயலர் அபூர்வ சந்திரா, இந்தப் படம் பார்வையாளர்களை கவர்வது மட்டுமின்றி, இதயத்தையும் தொடுவதாக தெரிவித்தார். இந்திய விண்வெளித்துறையின் சாதனைகளுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த திரு.நம்பி நாராயணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837273
***************
(Release ID: 1837299)
Visitor Counter : 207