புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐ நா கடல்சார் மாநாடு நாளை தொடங்குவதையொட்டி இந்திய குழு மற்றும் லிஸ்பனில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினார்

Posted On: 26 JUN 2022 5:22PM by PIB Chennai

போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் 5 நாள் ஐநா கடல்சார் மாநாடு  நாளை தொடங்குவதையொட்டி, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர்  திரு ஜிதேந்திர சிங், இந்திய பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் மாநாட்டுக்கு முந்தைய ஆலோசனைகளில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் விவாதித்தார். உலக அளவில் சமூகம், கொவிட் பெருந்தொற்றால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் இத்தருணத்தில் இம்மாநாட்டிற்கு கென்யா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடலைப் பாதுகாப்போம், எதிர்காலத்தை பாதுகாப்போம் என்ற உலக கடல்சார்  திட்டத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், அறிவியலை அடிப்படையாகக் கொண்ட புதுமையான தீர்வுகளை இந்தியா அளிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

நாளை (ஜூன் 27, 2022) தொடங்கி ஜூலை 1, 2022 வரை நடைபெறவுள்ள மாநாட்டில் 130 நாடுகளுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837127

------


(Release ID: 1837154) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Marathi , Hindi