திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் அழகு மற்றும் நலவாழ்வு துறை குழுமம் சார்பில் 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 22 JUN 2022 3:11PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும்  தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அழகு மற்றும் நலவாழ்வு துறை குழுமம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், யோகா பயிற்சி படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசிய  திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், பயிற்சி பெற்றவர்களில் சிலர், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும், அறிவை பகிர்ந்து கொள்வதில் வயது ஒரு தடையல்ல என்றும் கூறினார்.

இந்த மையத்தில் யோகா ஆலோசகர், யோகா பயிற்சியாளர் மற்றும் மூத்த யோகா பயிற்சியாளர் என்ற மூன்று பிரிவுகளில் படிப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை கூடுதல் செயலாளர் திரு கே கே திவிவேதி, கடந்த எட்டு வருடங்களில் 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்களுக்கான  பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார். இந்த துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836209

***************



(Release ID: 1836239) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Punjabi