வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிடழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் ஒரு மாவட்டம் - ஒரு பொருள் திட்டத்தின்கீழ் குவஹாத்தியில் பிரம்மாண்டமான வாங்குவோர்-விற்போர் சந்திப்பு

Posted On: 22 JUN 2022 1:46PM by PIB Chennai

நீடித்த வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் சந்தை தொடர்புகளை உருவாக்குதல் எனும் தொலைநோக்கோடு குவஹாத்தியில் பிரம்மாண்டமான வாங்குவோர்-விற்போர் சந்திப்பு நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தொழில் வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றின் ஒரு மாவட்டம் - ஒரு பொருள் என்ற திட்டத்தின்கீழ் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் வடகிழக்கு பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் பொருட்களில் கவனம் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 70-க்கும் அதிகமான விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், ஒருங்கிணைப்பாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். மேகாலயாவின் உலகப் புகழ்பெற்ற லேகாடாங் மஞ்சள், சிக்கிமிலிருந்து ஏலக்காய், திரிபுராவிலிருந்து பைனாப்பிள், அசாமிலிருந்து தேயிலை, மணிப்பூரிலிருந்து கருப்பு சாக்கோ அரிசி போன்றவை இந்த சந்தையில் இடம்பெற்றன.

விவசாயிகளுக்கும், பெரிய சந்தைகளுக்கும் இடையே பாலமாக பணியாற்றிவரும் வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் கழகம் இந்த சந்திப்பில் இருதரப்பினருக்கும் உதவியாக இருந்தது.  வாங்குவோர்-விற்போர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் ஆகியோரிடையே வர்த்தகம் சார்ந்த விவாதங்களும் நடைபெற்றன.  மேலும் ரூ.6 கோடி மதிப்பிலான விருப்புறுதி கடிதங்களும் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாயின.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836190    

******** 



(Release ID: 1836217) Visitor Counter : 187