பாதுகாப்பு அமைச்சகம்

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா பயிற்சியை இடைவிடாமல் மேற்கொள்ளுமாறு மக்களுக்கு சர்வதேச யோகா தினத்தையொட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Posted On: 21 JUN 2022 5:25PM by PIB Chennai

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா பயிற்சி  தொடர்ந்து  மேற்கொள்ளுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களை  கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி ஸ்ரீ சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், யோகா உடலுக்கு மட்டுமல்லாமல், உள்ளத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய பயிற்சி என்று குறிப்பிட்டார்.  எண்ணங்களை நேர்மறையான திசையில் கொண்டு செல்ல இது உதவும் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் யோகா சர்வதேச அங்கீகாரத்தின் மூலம் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது என்றும், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழும், மக்களின் தீவிர ஒத்துழைப்பாலும் இந்தியாவின் புதிய அடையாளமாக மாறியுள்ளது என்றும் திரு ராஜ்நாத் சிங் கூறினார். “ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய நமது பிரதமர், யோகா தினத்தைக் கொண்டாட சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த தீர்மானத்தை ஐநா ஏற்றுக்கொண்டது நிச்சயமாக மனிதகுலத்தின் நலனுக்கான ஒரு பெரிய சாதனையாகும். 2016 டிசம்பர் 01-ந் தேதி அன்று, மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரிய  பட்டியலில் யுனெஸ்கோவால் யோகா சேர்க்கப்பட்டபோது, உலகளவில் யோகா மேலும் அங்கீகாரம் பெற்றது,” என்று அவர் கூறினார்.

"இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளாக உலக அமைதி மற்றும் மனிதநேய சிந்தனைகளை பரப்பி வருகிறது.  உலகமே ஒரே குடும்பம் என்ற செய்தியை வழங்குவதன் மூலம், இந்தியா தனது எல்லைக்குள் வாழும் மக்களை மட்டும் தனது குடும்பமாக கருதாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றாகக் கருதுகிறது. சத்குரு, தனது பணியின் மூலம், புதிய சுற்றுச்சூழல் இயக்கத்தை உருவாக்குவதற்காக, உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒரே இழையில் இணைப்பதன் மூலம்  இந்த உணர்வை நிச்சயமாக உயிர்ப்பித்துள்ளார். 'மண்ணைக் காப்போம்' போன்ற பிரச்சாரங்கள் மூலம் அவர் உலகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்” என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835963

**************



(Release ID: 1836047) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi