வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகள் பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது
"இது ஒரு புதிய இந்தியா, இது பிரச்சனைகளை தீர்க்கும், புதிய உறுதிமொழிகளை எடுத்து, அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அயராது உழைக்கும்"
"21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப பிரக்தி மைதானத்தை மாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது"
"நாட்டின் தலைநகரில் உலகத் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளுக்கான அதிநவீன வசதிகள், கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றிற்காக இந்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது"
“மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நவீன உள்கட்டமைப்பு டெல்லியின் அமைப்பை மாற்றி நவீனமாக்குகிறது. இந்த மாற்றம் விதியை மாற்றுவதற்கான ஒரு ஊடகமாகும்’’
"உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்துவது சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் இயக்கப்படுகிறது"

"உலகின் சிறந்த இணைக்கப்பட்ட தலைநகரங்களில் ஒன்றாக டெல்லி உருவாகி வருகிறது"

"விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸின் ஒரு அ

Posted On: 19 JUN 2022 4:41PM by PIB Chennai

பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டமானது பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சோம் பிரகாஷ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திரு கவுஷல் கிஷோர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இத்திட்டத்தை தில்லி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய பெரிய பரிசு என்றார். போக்குவரத்து நெரிசல் மற்றும் தொற்றுநோய் காரணமாக திட்டத்தை முடிப்பதில் ஏற்பட்ட சவாலின் தன்மையை அவர் நினைவு கூர்ந்தார். புதிய இந்தியாவின் புதிய பணி கலாச்சாரம் மற்றும் திட்டத்தை முடித்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களை அவர் பாராட்டினார். "இது ஒரு புதிய இந்தியா, இது பிரச்சனைகளை தீர்க்கிறது, புதிய உறுதிமொழிகளை எடுக்கிறது. அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அயராது உழைக்கிறது" என்று பிரதமர் கூறினார்.

21ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப பிரக்தி மைதானத்தை மாற்றும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவை மாற்றினாலும், இந்தியாவைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பிரக்தி மைதானம் முன்முயற்சியின்மை மற்றும் அரசியலின் பற்றாக்குறையால் பின்தங்கியுள்ளது என்று அவர் வருத்தப்பட்டார். "துரதிர்ஷ்டவசமாக பிரகதி மைதானத்தில் 'பிரகதி' (முன்னேற்றம்) அதிகமாக இல்லை" என்று அவர் கூறினார். இதற்கு முன் பல ஆரவாரங்கள் மற்றும் விளம்பரங்கள் செய்திருந்தபோதிலும், இது மாற்றப்படவில்லை. துவாரகாவில் உள்ள சர்வதேச மாநாடு ,கண்காட்சி மையம் மற்றும் மறுவடிவமைப்பு திட்டம் போன்ற நிறுவனங்களைப் பற்றி பேசுகையில், "நாட்டின் தலைநகரில் நவீன வசதிகள், உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளுக்கான கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றிற்காக இந்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. “மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நவீன உள்கட்டமைப்பு டெல்லியின் அமைப்பை மாற்றி நவீனமாக்குகிறது. இந்த மாற்றம் விதியை மாற்றுவதற்கான ஒரு ஊடகமாகும்" என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவது, சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலம் இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் காலநிலை உணர்வு உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் மற்றும் நாட்டிற்காக உழைக்கும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் மனப்பான்மைக்கு உதாரணமாக ஆப்பிரிக்க அவென்யூ மற்றும் கஸ்தூரிபா காந்தி சாலையில் உள்ள புதிய பாதுகாப்பு அலுவலக வளாகத்தை பிரதமர் எடுத்துக்காட்டினார். மேலும், சென்ட்ரல் விஸ்டா திட்டம் வேகமாக நடைபெற்று வருவதாக திருப்தி தெரிவித்த அவர், வரும் நாட்களில் இந்தியாவின் தலைநகரம் உலக அளவில் பேசப்படும் விஷயமாகவும், இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும் இருக்கும் என்றார்.

நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர்ஒரு மதிப்பீட்டின்படி 55 லட்சம் லிட்டர் எரிபொருள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை 5 லட்சம் மரங்களை நடுவதற்கு சமமான சுற்றுச்சூழல் ஈவுத்தொகைக்கு வழிவகுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வழித்தடத்தால்  கிடைக்கும் பெரும் நன்மைகள் குறித்து விளக்கியதுடன், வாழ்க்கை வசதியை மேம்படுத்த இந்த நிரந்தர தீர்வுகள் காலத்தின் தேவை என்றார். “கடந்த 8 ஆண்டுகளில், தில்லி-என்சிஆர் பிரச்சனைகளை தீர்க்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த 8 ஆண்டுகளில், தில்லி-என்.சி.ஆரில் மெட்ரோ சேவை 193 கி.மீ முதல் 400 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது. மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச்சாலை, தில்லி-மீரட் விரைவுச்சாலை ஆகியவை தில்லி மக்களுக்கு பெரிதும் உதவியுள்ளன. காசி ரயில் நிலையத்தில் மக்களுடன் உரையாடியதைக் குறிப்பிட்ட பிரதமர், சாமானியர்களின் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த மாற்றத்திற்கு ஏற்ப செயல்பட அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். தில்லி-மும்பை, தில்லி-டேராடூன், தில்லி-அமிர்தசரஸ் ,தில்லி-சண்டிகர், தில்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலைகள் தில்லியை உலகின் சிறந்த இணைக்கப்பட்ட தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு குறித்தும் அவர் பேசினார். இந்தியாவின் தலைநகராக தில்லியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு, தொழில் வல்லுநர்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகள், டாக்சி-ஆட்டோ ஓட்டுநர்கள், வணிக சமூகத்தினர் ஆகியோருக்கு பயனளிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தில்லி மீரட் விரைவு ரயில் அமைப்பு குறித்தும் பேசினார்.

பிரதமர் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை மூலம் நாடு பலதரப்பட்ட இணைப்பை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸின் அங்கம் என்று அவர் கூறினார். சமீபத்தில் தர்மசாலாவில் நடைபெற்ற தலைமைச் செயலாளர் மாநாட்டில், விரைவுசக்தியை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 'அமிர்த கால' நிகழ்ச்சியின் போது, "நாட்டின் மெட்ரோ நகரங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதும், அடுக்கு-2, அடுக்கு-3 நகரங்களில் சிறந்த திட்டமிடலுடன் செயல்படுவதும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு, நகரங்களை பசுமையாகவும், தூய்மையாகவும், நட்புறவாகவும் மாற்ற வேண்டும். நகரமயமாக்கலை சவாலாகக் கருதாமல் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், அது நாட்டின் பன்மடங்கு வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று பிரதமர்

முதல்முறையாக, எந்த ஒரு அரசும் செய்யாத அளவுக்கு , இவ்வளவு பெரிய அளவில் நகர்ப்புற திட்டமிடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். நகர்ப்புற ஏழைகள் முதல் நகர்ப்புற நடுத்தர மக்கள் வரை அனைவருக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு உறுதியான  வீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களுக்கும் வீடு கட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நகரங்களில் நவீன பொதுப் போக்குவரத்தில் கவனம் செலுத்தினால், சிஎன்ஜி அடிப்படையிலான இயக்கம் மற்றும் மின்சார இயக்கத்தின் உள்கட்டமைப்பு ஆகியவையும் முன்னுரிமை பெறும். மத்திய அரசின் எப்ஏஎம்இ  திட்டம் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

வாகனத்தை விட்டு வெளியே வந்து சுரங்கப்பாதையில் நடந்து சென்ற பிரதமர், சுரங்கப்பாதையில் உள்ள கலைப்படைப்புகள் திட்டமிட்ட பணிகளுக்கு அப்பாற்பட்டு மதிப்பு கூட்டியிருப்பதையும், ஒரே பாரதம் உன்னத பாரதம்  பற்றிய சிறந்த ஆய்வு மையமாக இருப்பதாகவும் கூறினார்.  ஒருவேளை, இது உலகின் மிக நீளமான கலைக்கூடங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமைகளில் சில மணிநேரங்களுக்கு சுரங்கப்பாதையை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் பார்வைக்காக அனுமதிக்க  வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

திட்டத்தின் விவரங்கள்:

பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டம் ரூ. 920 கோடி, செலவில் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவிடன் உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகத் தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு தொந்தரவு இல்லாத மற்றும் சுமூகமான அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எளிதாக பங்கேற்க முடியும்.

எவ்வாறாயினும், திட்டத்தின் தாக்கம் பிரகதி மைதானத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும், ஏனெனில் இது தொந்தரவு இல்லாத வாகன இயக்கத்தை உறுதி செய்யும், பயணிகளின் நேரத்தையும் செலவையும் பெரிய அளவில் சேமிக்க உதவுகிறது. நகர்ப்புற உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மக்கள் எளிதாக வாழ்வதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் மேற்பார்வையின் ஒரு பகுதியாகும்.

பிரதான சுரங்கப்பாதை சுற்றுவட்டப் பாதையை இந்தியா கேட் உடன் புரானா கிலா சாலை, பிரகதி மைதானம் வழியாக இணைக்கிறது. ஆறு வழித்தடமாக பிரிக்கப்பட்ட சுரங்கப்பாதையானது பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் உட்பட பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. சுரங்கப்பாதையின் ஒரு தனித்துவமான கூறு என்னவென்றால், வாகன நிறுத்துமிடத்தின் இருபுறமும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பிரதான சுரங்கப்பாதை சாலைக்கு கீழே இரண்டு குறுக்கு சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. சிறந்த தீத்தடுப்பு மேலாண்மை , நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்படும் சிசிடிவி அமைப்பு மற்றும் சுரங்கப்பாதைக்குள் பொது அறிவிப்பு அமைப்பு போன்ற போக்குவரத்தை சீராக இயக்குவதற்கான சமீபத்திய உலகளாவிய தரநிலை வசதிகளுடன் இது நவீனப்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை பைரோன் மார்க்கிற்கு மாற்று பாதையாக செயல்படும், இது பைரோன் மார்க்கின் போக்குவரத்தில் பாதிக்கு மேல் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுரங்கப்பாதையுடன், மதுரா சாலையில் நான்கு, பைரன் மார்க்கில் ஒன்று மற்றும் ரிங் ரோடு மற்றும் பைரோன் மார்க்கின் சந்திப்பில் ஆறு பாதாளச் சாலைகள் இருக்கும்.

************


(Release ID: 1835325) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi