பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு & காஷ்மீர் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமைச் செயல் அதிகாரி திரு.பல்தேவ் பிரகாஷ், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஜம்மு & காஷ்மீர் வங்கியில் செயல்படுத்த உள்ள புதிய முன்முயற்சிகள் குறித்து விளக்கிக் கூறினார்

Posted On: 18 JUN 2022 5:23PM by PIB Chennai

ஜம்மு & காஷ்மீர் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமைச் செயல் அதிகாரியாக அண்மையில் பொறுப்பேற்ற திரு.பல்தேவ் பிரகாஷ், பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துஜம்மு & காஷ்மீர் வங்கியில் செயல்படுத்த உள்ள புதிய முன்முயற்சிகள் குறித்து விளக்கிக் கூறினார்

புதிய பொறுப்பை ஏற்றுள்ள திரு.பல்தேவ் பிரகாஷ்- வரவேற்றுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங்இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அமைக்கப்பட்ட ஜம்மு & காஷ்மீர் வங்கி, வளமான பாரம்பரியத்தைக் கொண்டது என்பதால்வங்கி சேவை மீதான நன்மதிப்பை நிலைநாட்டுவதுடன், குடிமக்களுக்கான பயன்கள் மீதும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.   இந்த வங்கி, ஏற்கனவே பெற்றிருந்த நம்பகத்தன்மையை மீட்டெடுப்பது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கடமை என்றும் அவர் கூறினார்

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய தொழில் கொள்கையை செயல்படுத்துவதில் இந்த வங்கியின் பங்களிப்பையும் டாக்டர் ஜிதேந்திரசிங் பாராட்டினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835090

***


(Release ID: 1835115) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Punjabi