பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

மே 2022-க்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை

Posted On: 17 JUN 2022 2:18PM by PIB Chennai

2022 மே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2550.05 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இது அந்த மாத இலக்கை விட 2.44 சதவீதம் அதிகமாகும். மே 2021-ஐ விட, 4.60 சதவீதம் உற்பத்தி அதிகம்.  ஏப்ரல்-மே 2022-ல் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 5019.72 டிஎம்டி ஆகும். இது இலக்கை விட 2.86 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே கால உற்பத்தியை விட 1.79 சதவீதம் அதிகமாகும்.

இயற்கை வாயு உற்பத்தியை பொறுத்தவரை மே 2022-ல் 2913.65 எம்எம்எஸ்சிஎம் ஆக இருந்தது. இது அந்த மாத இலக்கை விட 5.06 சதவீதம் குறைவாகும். எனினும் 2021 மே மாதத்தை விட 6.35 சதவீதம் அதிகமாகும்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் மே 2022-ல் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி 22942.49 டிஎம்டி இது இலக்கை விட 4.49 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட இந்த உற்பத்தி 17.06 சதவீதம் அதிகமாகும்.

2022 மே மாதத்தில் 23250 டிஎம்டி பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது இலக்கை விட 4.36 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தை விட உற்பத்தி 16.65 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834770

***************



(Release ID: 1834798) Visitor Counter : 168


Read this release in: English , Hindi