குடியரசுத் தலைவர் செயலகம்
புதிய இஸ்கான் கோவில் தொடக்க நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை
Posted On:
14 JUN 2022 1:53PM by PIB Chennai
வணக்கம்‘ ஹரே கிருஷ்ணா
கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும். இவற்றின் மெய்சிலிர்ப்பாக அல்லது சக்தியாக அல்லது ஆழமான பக்தி உணர்வாக தெய்வநிலை இருப்பதாக பக்தர்கள் உணர்கிறார்கள். இது போன்ற இடங்களுக்கு வரும்போது ஒருவர் இந்த உலகத்தையும், அதன் பின்னால் உள்ள சப்தத்தையும் விட்டுவிட்டு அமைதி உணர்வில் உறைகிறார்கள். மற்றொரு நிலையில், வழிபாட்டிடம் என்பதைவிட, உயர்ந்ததாக கோவில்கள் கருதப்படுகின்றன. இவை சங்கம இடம் போன்று இருக்கின்றன. அல்லது கலை, கட்டடக்கலை, மொழி, ஞான பாரம்பரியங்கள், ஆகியவற்றின் புனித சங்கமமாகவும் இருக்கின்றன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவி கீதையை உலகில் பரப்பியதில் தெய்வத்திரு ஏ.சி.பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவரது படைப்புகள் 70-க்கும் அதிகமான மொழிகளில் லட்சக்கணக்கான பிரதிகள், விநியோகிக்கப்பட்டு எண்ணற்ற மக்களிடம் தெய்வீகச் செய்தி கொண்டுசெல்லப்பட்டது. சிரமமான நேரங்களில் ஆன்மீக உதவி தேவைப்படுவோருக்கு ஸ்ரீல பிரபுபாதாவின் வார்த்தைகள், தாகத்தில் தவிப்போருக்கு முதலாவது மழைத்துளி போன்ற உணர்வைக் கொண்டதாக இருந்தன. நரக வீதிகளில் ‘ஹரே கிருஷ்ணா’ முழங்கியது. கலாச்சார செயல்பாடாக மாறியது.
வழிபாடு என்ற வடிவில் உதவித் தேவைப்படுவோருக்கு ஸ்ரீல பிரபுபாதா சேவைகள் செய்துள்ளார். அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கம் (இஸ்கான்) மனிதாபிமான பணிகளிலும், ஈடுபட்டு வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்த இயக்கம் கடந்த 25 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்களுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்துள்ளது. பக்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்புக் காரணமாக ஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தின் ஹரே கிருஷ்ணா மலை பிரமாண்டமான இஸ்கான் அமைப்பாக மாற்றம் பெற்றுள்ளது.
உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாக அட்சயப் பாத்திர அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. கிருஷ்ணன் கோவிலை சுற்றியுள்ள பத்து மைல் வட்டாரத்திற்குள் இருக்கும் எவரும் குறிப்பாக குழந்தையை பசியுடன் இருக்கக் கூடாது என்ற ஸ்ரீல பிரபுபாதாவின் விருப்பத்தால் இந்த இயக்கம் உத்வேகம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 18 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச் சத்து மிக்க மதிய உணவை பெறுகின்றனர். பெருந்தொற்றுக் காலத்தில் அட்சயப் பாத்திர அறக்கட்டளையும் அதன் ஆதரவு அமைப்புகளும் துயருற்ற 25 கோடி மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கின. இத்தகைய மனிதாபிமான உதவிகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளித்துள்ளன.
பெங்களூருவில் உள்ள இஸ்கான் இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க உறுப்பினர்களுக்கும் திரு மது பண்டிட் தாசாவுக்கும் அவர்களின் சமயம் சார்ந்த, மனிதாபிமான முன்முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். பிருந்தாவனத்தில் அமையவிருக்கும் விருந்தாவன் சந்திரோதய ஆலயம் திட்டம் வெற்றி பெறவும், நான் வாழ்த்துகிறேன். கீதையின் நிறைவாக அர்ஜூனன் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
“எனது மயக்கங்கள் அகன்றுவிட்டன. உமது கருணையால் எனது நினைவுகளை நான் மீட்டெடுத்துள்ளேன். இப்போது நான் எனதுசந்தேகத்திலிருந்து விடுபட்டு உறுதியாக இருக்கிறேன். உமது கட்டளைகளின்படி செயல்பட நான் தயாராக இருக்கிறேன்” என்று ஸ்ரீல பிரபுபாதா தமது வார்த்தைகளில் இதனை விவரித்துள்ளார்.
நாம் அனைவரும் சந்தேகத்திலிருந்து விடுபடவும், உறுதிபூணவும் பாடுபடுவோம். அவரது கட்டளைகளின்படி செயல்பட தயாராவோம். ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்தா நம் அனைவரின் மீதும் அவரது ஆசிகளை பொழியட்டும்.
நன்றி
ஜெய்ஹிந்த்.
***************
(Release ID: 1833875)
Visitor Counter : 169