பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம் என லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில் நடைபெற்ற பயிற்சி திட்டத்தை தொடங்கிவைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் உரை

Posted On: 13 JUN 2022 3:18PM by PIB Chennai

தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகமும், பாதுகாப்பு படைகளும் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம் என  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள  லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில்    நடைபெற்ற 28 வது சிவில் - ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டத்தை தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார். ராணுவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதில், ராணுவம் அல்லாத பல பரிணாமங்கள் இடம்பெற்றுள்ளதால், தேசபாதுகாப்பு என்பது பரந்து விரிந்ததாக மாறியுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யா - உக்ரைன் நிலவரம் மற்றும் அதேபோன்ற பிற மோதல்கள், வழக்கமான போர் முறைகளிலிருந்து மாறுப்பட்டு இருப்பதை உலகம் கண்கூடாக காண்பதாகவும் திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அமைதி உடன்படிக்கை காலகட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த சில தசாப்தங்களாக முழு அளவிலான போர் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலாக  மறைமுக மற்றும் தாக்குதல்கள்  இல்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பம், வினியோக சங்கிலி, தகவல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடைமுறைகள் போன்றவை ஆயுதமயமாக்கப்படுவதாகவும், இத்தகைய ஆயுதம் வரும் காலங்களில் நமக்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, இதுபோன்ற பரந்து விரியும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833513   

  ------------


(Release ID: 1833594) Visitor Counter : 201