சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் – டிஜிட்டல் சுகாதாரத்தில் புரட்சி என்ற மாநாட்டிற்கு தேசிய சுகாதார ஆணையம், நாஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு
Posted On:
13 JUN 2022 3:49PM by PIB Chennai
தேசிய சுகாதார ஆணையம், NASSCOM (தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம்) ஆகியவை இணைந்து ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் – டிஜிட்டல் சுகாதாரத்தில் புரட்சி என்ற மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளன. பெங்களூருவில் இன்று கலப்பு முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர், அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், இந்திய மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழமுடியும் என்றார். இந்த நிலையை அடைய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, தொழில்நுட்ப தளங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர் எஸ் சர்மா, டிஜிட்டல் புரட்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார். நம் நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமான கோவின் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வெற்றியை இந்த உலகம் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றியை பிற சுகாதார சேவைகளிலும் பிரதிபலிக்க செய்ய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஆர் எஸ் சர்மா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833522
***************
(Release ID: 1833562)
Visitor Counter : 243