பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"சிறந்த நடைமுறைகளுக்கான குறியீடு" இஎஸ்ஜி - சிஎஸ்ஆர் என்பது குறித்த கண்காட்சியுடன் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை ஐஐசிஏ கொண்டாடியது

Posted On: 12 JUN 2022 4:54PM by PIB Chennai

மனேசர் ஐஎம்டி யில்  உள்ள பெருநிறுவன விவகாரங்களுக்கான இந்திய கல்விக் கழக (ஐஐசிஏ)  வளாகத்தில் இஎஸ்ஜி மற்றும் சிஎஸ்ஆர் -ன் புரட்சிகரப் பரிணாமத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்துறை தலைவர்கள் பங்கேற்றனர்.  30க்கும் அதிகமான முன்னிலை நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சிக்கு   சுற்றுச்சூழல் -  சமூகம் - நிர்வாகம்  (இஎஸ்ஜி) பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) ஆகியவற்றில் தங்களின் நடைமுறைகளைக்  காட்சிப்படுத்தின.

 

இந்த விழாவில் பெருநிறுவனங்கள் விவகாரத்திற்கான மத்திய இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தலைமை விருந்தினராக இணையதளம் மூலம் பங்கேற்றார். தமது அமைச்சகத்தின் பங்களிப்பு  பெருநிறுவன நிர்வாகத்தை சிறந்த முறையில்  மேம்படுத்துவதாக அவர் கூறினார்.  நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு  இது மேலும்  வசதியாக இருக்கும் என்றார். ' குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம்', மக்களின் நம்பிக்கை, வணிகம் செய்வதை எளிதாக்குதல்

என்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பழைய விதிகளையும் சுமார் 1500 மத்திய சட்டங்களையும் அரசு ரத்து செய்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

வரவிருக்கும் அமிர்த காலம் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான  அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்தும்.  வாழ்க்கையை எளிதாக்கமூலதனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தநம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம்மனித வளங்கள் ஆகியவற்றை இலக்காக அரசு பின்பற்றும். நீடித்த வளர்ச்சி என்பது தற்போது மக்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவின் கீழ் நீடித்த வளர்ச்சி என்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  எனவே நீடித்த வளர்ச்சி என்ற கோட்பாட்டை பின்பற்றுவது அரசியல் சட்டப்படியான கடமையாகும் என்று அவர் கூறினார்.

 

தனிநபர் என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோள்களில் மகத்தான பொறுப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  தனிநபர் மனநிலையில் மாற்றமில்லாத வரை பெருந்திரளான புரட்சி என்பது சிக்கலாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பெருநிறுவனங்களின் நிர்வாகிகள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833296

 

******


(Release ID: 1833355) Visitor Counter : 211


Read this release in: English , Urdu , Hindi , Telugu