வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி – லண்டன் ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்பு
Posted On:
10 JUN 2022 1:51PM by PIB Chennai
லண்டன் ஒயின் கண்காட்சி ஜுன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சியால், பத்து இந்திய ஒயின் ஏற்றுமதியாளர்கள் லண்டன் ஒயின் கண்காட்சியில் பங்கேற்றனர்.
ஒயின் தொடர்பான உலகின் மிக முக்கியமான வணிக சந்தையாக லண்டன் ஒயின் கண்காட்சி கருதப்படுகிறது. இது ஜுன் 7 முதல் ஜுன் 9 வரை நடைபெற்றது.
ரெஸ்வேரா ஒயின்ஸ், சுலா ஒயின் யார்ட்ஸ், குட்டிராப் ஒயின் செல்லர்ஸ், ஹில் ஜில் ஒயின்ஸ் உள்ளிட்ட இந்திய ஒயின் ஏற்றுமதியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
உலக அளவில் மதுபானங்களுக்கான ஏற்றுமதி சந்தையில் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், தானியங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 33,919 கிலோ லிட்டர் மதுபானம் தயாரிக்க உரிமம் பெற்ற 12 நிறுவனங்கள் உள்ளன. இவை இந்திய அரசின் உரிமம் பெற்று 56 யூனிட் பீர் தயார் செய்கின்றன.
2020-21-ம் ஆண்டில், இந்தியா, 322.12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய, 2.47 லட்சம் மெட்ரிக் டன் மதுபானப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2020-21-ல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கானா, கேமரூன், காங்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மதுபானப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு பின்வரும் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832846
***************
(Release ID: 1832913)
Visitor Counter : 239