பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
சுதந்திர அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக, பெரு நிறுவனங்கள் அமைச்சகத்தின் சார்பில், “வலுவான சுதந்திரமான கண்காணிப்பு வாயிலாக, உயர்தர நிதி அறிக்கை கட்டமைப்பு” குறித்த நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தரங்கை திரு ராவ் இந்தர்ஜித் சிங் நாளை தொடங்கிவைக்கிறார்
प्रविष्टि तिथि:
10 JUN 2022 1:34PM by PIB Chennai
பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின் ஒருவார கால சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “வலுவான சுதந்திரமான கண்காணிப்பு வாயிலாக, உயர்தர நிதி அறிக்கை கட்டமைப்பு” குறித்த கருத்தரங்கிற்கு நிதி ஒழுங்குமுறை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
புள்ளியியல் & திட்ட அமலாக்கத் துறை மற்றும் பெருநிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மத்திய பெருநிறுவனங்கள் துறை செயலாளர் திரு ராஜேஷ் வர்மா கவுரவ விருந்தினராக பங்கேற்கவுள்ளார். தேசிய நிதி ஒழுங்குமுறை ஆணையம், டிசம்பர் – ஜனவரி 2022- ல் நடத்திய அகில இந்திய அளவிலான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய அமைச்சர் சிறப்பிக்கவுள்ளார்.
தேசிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த சிறப்பு நிகழ்ச்சியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தணிக்கை மற்றும் கணக்கியல் தர கட்டுப்பாடு வல்லுனர்கள் பங்கேற்கவுள்ளனர். ஜப்பானின் சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர்கள் கண்காணிப்பு வாரிய நிபுணர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832837
***************
(रिलीज़ आईडी: 1832890)
आगंतुक पटल : 308