பாதுகாப்பு அமைச்சகம்
ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஹிமான்ஷூ பாண்டேயின் உத்ராகண்ட் இல்லத்திற்கு மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் சென்றார்
Posted On:
08 JUN 2022 2:54PM by PIB Chennai
ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்துள்ள ஹிமான்ஷூ பாண்டேயின் உத்ராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் உள்ள இல்லத்திற்கு மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் நேற்று சென்றார். கடின உழைப்புடன் சாதனைப் படைத்த ஹிமான்ஷூக்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் அவருடைய எதிர்கால வெற்றிக்கும் வாழ்த்துவதாகக் கூறினார். ஹிமான்ஷூவின் வெற்றியால் ஹல்துவானி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உத்ராகண்ட் மாநிலமே பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார். ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைக்கான தேர்வில் அர்ப்பணிப்புடனும், கடின உழைப்புடனும், ஹிமான்ஷூ வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இது மற்ற இளைய மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று கூறினார்.
கடினமான தருணங்களில்கூட ஹிமான்ஷூவின் கல்விக்கு உறுதுணையாக இருந்த அவருடைய பெற்றோருக்கும் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
-----
(Release ID: 1832159)
Visitor Counter : 171