தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஐஐஎம்சி சேர்க்கை 2022 தொடங்கியுள்ளது, ஜூன் 18க்கு முன் சியூஇடி வழியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்

Posted On: 03 JUN 2022 1:29PM by PIB Chennai

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (ஐஐஎம்சி) மாஸ் கம்யூனிகேஷன், இதழியல் ஆகிய முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கையைத்  தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியூஇடி) மூலம் ஐஐஎம்சி சேர்க்கைகள் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 ஐஐஎம்சி சேர்க்கைக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 18 ஆகும்.

ஆங்கில இதழியல், இந்தி இதழியல் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு,ரேடியோ மற்றும் டிவி இதழியல், டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ஐஐஎம்சியில் என்டிஏ நடத்தும்.

பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் மூலம் நடத்தப்படும். இது பற்றிய விவரங்கள் விரைவில் ஐஐஎம்சி தகவல் தொகுப்பில் கிடைக்கும்.

ஒடியா, மராத்தி, மலையாளம், உருது ஆகிய மொழிகளில் இதழியல் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தனித்தனியாக நடைபெறும், இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஐஐஎம்சி இணையதளமான www.iimc.gov.inல் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு , விண்ணப்பதாரர்கள் கல்வித்துறை, இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம், அருணா ஆசஃப் அலி மார்க், புது தில்லி-110067 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண். 011-26742920, 26742940, 26742960 (நீட்டிப்பு 233). மொபைல் எண். 9818005590, (மொபைல் எண். 9871182276 -வாட்ஸ்அப் செய்திக்கு மட்டும்)

----

 



(Release ID: 1830818) Visitor Counter : 150