தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தொற்றுநோயை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் - மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022

प्रविष्टि तिथि: 02 JUN 2022 11:50AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  தொற்று பரவல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் மரணம், நீடித்த பொதுமுடக்கம், வீட்டுத்தனிமை போன்றவை உலகத்தை புரட்டிப் போட்டது. தொற்றுநோயால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்கள் பற்றிய ஆய்வுகள் இன்னமும் நடந்து வருகின்றன. சமூகத்தின் மாறுபாடுகள், மனிதனின் உணர்ச்சிகள் ஆகியவற்றை கலைவடிவமாக மாற்றி, கருப்பொருளாக வைத்து திரைப்படங்களை தயாரித்துள்ளனர். 17-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், கொவிட்-19 தொற்றுநோயை மையமாகக் கொண்ட சிறந்த திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திரைப்படங்கள் பெருந்தொற்றின் காலத்தில் மனிதர்களின் தொடர்புகள், அதன் தாக்கங்கள், தனிமைப்படுத்தலால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. இந்த படங்கள் சர்வதேச, தேசிய திரைப்பட போட்டிகள் போன்றவற்றில் திரையிடப்பட்டுள்ளன.

***************


(रिलीज़ आईडी: 1830477) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi