புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் சென்னையில் உள்ள ஏபிஎஸ் கடல்சார் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் ஆய்வுப்பணிகளுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
01 JUN 2022 2:55PM by PIB Chennai
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் சென்னையில் உள்ள ஏபிஎஸ் கடல்சார் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் ஆய்வுப்பணிகளுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தொழில் நடத்துதல், ஆட்களை பணியமர்த்துதல், சாதனங்கள் பராமரிப்பு, உணவுப் பொருள் தயாரிப்பு, தூய்மை செய்தல் போன்ற ஆறு ஆய்வுப்பணிகளுக்கான ஒப்பந்தம் நேற்று (31.5.2022) கையெழுத்தானது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் உள்ள கடல்சார் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட சாகர் நிதி, சாகர் மஞ்சுஷா, சாகர் அன்வேஷிகா, சாகர் தாரா போன்ற ஆய்வுப்பணிகள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கோவாவில் உள்ள துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தால் நிர்வகிக்கப்பட்ட சாகர் கன்யா, கொச்சியில் உள்ள கடல் சார் உயிரின வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தால் நிர்வகிக்கப்பட்ட சாகர் சம்படா ஆகியவையும் இதில் அடங்கும்.
மூன்றாண்டு காலத்திற்கு ரூ.42 கோடி தொகைக்கான இந்த ஒப்பந்தத்தின் காரணமாக உயர் தொழில்நுட்பம் கொண்ட ஆராய்ச்சி சாதனம் மற்றும் சோதனைக் கூடங்களை பராமரிப்பதற்கும், செயல்படுத்துவதற்குமான கட்டணங்கள் கணிசமாக அமைச்சகத்திற்கு குறையும் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830067
*****
(Release ID: 1830140)
Visitor Counter : 211