மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

75-வது தொழில்முனைவோர் மற்றும் 75 உள்நாட்டு கால்நடை இனங்களின் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் திரு.பர்ஷோத்தம் ருபாலா உரையாற்றுகிறார் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் டாக்டர்.எல்.முருகன், டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்

Posted On: 31 MAY 2022 2:34PM by PIB Chennai

புதுதில்லியில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75-வது தொழில்முனைவோர் மற்றும் 75 உள்நாட்டு கால்நடை இனங்களின் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ருபாலா கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகன், மத்திய இணையமைச்சர் டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்புடன் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, பால் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள், புதுமையான தொழில்களைத் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோர், தொழில்துறையினர் மற்றும் சிறந்த 75 உள்நாட்டு கால்நடை இனங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சியை மையமாகக் கொண்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், உற்பத்தித் திறனை அதிகரிப்பது, கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டல், சந்தை இணைப்புகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டிஜிட்டல் கண்காட்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி, 75 உள்நாட்டு கால்நடை இனங்கள் மற்றும் பால் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள், புதிய தொழில்முனைவோர், புதிய தொழில்கள் மற்றும் தொழிற்துறைகளின் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***************



(Release ID: 1829779) Visitor Counter : 257