உள்துறை அமைச்சகம்

பத்ம விருதுகள் 2023-க்கு 15 செப்டம்பர் 2022 வரை விண்ணப்பிக்கலாம்

Posted On: 30 MAY 2022 4:18PM by PIB Chennai

2023 குடியரசு தினத்தையொட்டி ழங்கப்படவிருக்கும் பத்ம விருதுகள் 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் 1 மே 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.

 நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

 தற்போதைய மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விருதுகளைப் பெறத் தகுதியானவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இணையதளத்தில் உள்ள படிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாத குறிப்புகளுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுபோன்ற சாதனையாளர்களை மற்றவர்களும் விருதுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இணையதள முகவரி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829442

***************(Release ID: 1829569) Visitor Counter : 227