சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 193.31 கோடியைக் கடந்தது

Posted On: 30 MAY 2022 9:35AM by PIB Chennai

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 193.31 கோடிக்கும் அதிகமான (1,93,31,57,352) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,45,16,503 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.38 கோடிக்கும் அதிகமான (3,38,07,441) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது..

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (17,698) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.04 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  2,070 பேர்.  குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  4,26,13,440.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,706 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,78,267 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 85 கோடி (85,00,77,409). வாராந்திரத் தொற்று 0.58 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.97 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1829329

***************


(Release ID: 1829349) Visitor Counter : 133