இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனே பல்கலைக்கழகத்தின் கசாபா ஜாதவ் விளையாட்டு வளாகத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார்

Posted On: 28 MAY 2022 3:34PM by PIB Chennai

நாட்டின் அனைத்து மட்டங்களிலும் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தி,  இந்திய இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கச் செய்ய வேண்டுமென, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.    

சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைகழக விளையாட்டு வளாகத்தை தொடங்கிவைத்துப் பேசிய திரு.தாக்கூர்,   “நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு, மாநில அரசுகள், பல்கலைகழகங்கள், விளையாட்டுக் கூட்டமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்“ என்றார்.   ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் பதக்கம் வென்ற இந்தியரான கசாபா ஜாதவ் பெயரில் அதிநவீன விளையாட்டு வளாகத்தை உருவாக்கியிருப்பதற்காக, புனே பல்கலைகழகத்திற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.    புனே பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவரான கசாபா ஜாதவ், 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் கோட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன கட்டமைப்பு வசதிகள் மூலம், இப்பல்கலைகழகத்தை சசேர்ந்த விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்குவதோடு, எதிர்கால பல்கலைகழக விளையாட்டுப் போட்டிகளில், முதல் 2 – 3 இடங்களுக்குள் வர முயற்சிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.   புனே பல்கலைகழகத்தைப் போன்று அனைத்துப் பல்கலைகழகங்களும், தலைசிறந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்க முன்வர வேண்டுமெனவும் திரு.அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1828964

                                                            *****

 


(Release ID: 1829036) Visitor Counter : 145