தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கேன்ஸ் படவிழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இந்திய அரங்கைப் பார்வையிட்டார்


அதிகாரிகள், பிரதிநிதிகள், திரையுலகினருடன் அவர் கலந்துரையாடினார்
ஸ்டார்ட் அப் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு

Posted On: 22 MAY 2022 6:55PM by PIB Chennai

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், அங்குள்ள இந்திய அரங்குக்கு சென்று பார்வையிட்டார்.

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் நேற்று அதிகாலையில் புதுதில்லியிலிருந்து பிரான்சுக்கு புறப்பட்டார். நேற்று பிரான்ஸ் சென்றடைந்த அமைச்சர் முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

இன்று கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல் தொழிலில் தடம் பதிக்க உத்தேசித்துள்ள  5 இந்திய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

முன்னதாக வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய அரங்கை அமைச்சர் பார்வையிட்டார். பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் உடன் சென்றிருந்தார்.  அப்பொழுது அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் திரையுலக பிரமுகர்களுடன் டாக்டர் எல். முருகன் கலந்துரையாடினார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் முருகன்," பிரான்சில் உள்ள இந்திய தூதர் @JawedAshraf5 சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-பிரான்ஸ் உறவுகள் மற்றும் @Festival_Cannes 2022 உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து  உரையாடினோம்," என்று தெரிவித்தார்.

திரைப்பட விழாவில் 22-ந் தேதி முதல், 24-ந் தேதி வரை அவர் கலந்து கொள்கிறார்.  டாக்டர் முருகன் 25-ந் தேதி காலையில் புதுதில்லி வந்து சேர்வார்.

****



(Release ID: 1827453) Visitor Counter : 115