பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆண்டு இறுதிக்குள் நான்-கெஜடட் பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை (CET) நடத்த என்ஆர்ஏ தயாராகி வருகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
22 MAY 2022 5:14PM by PIB Chennai
இந்த ஆண்டு முதல் நான்-கெஜடட் பிரிவில் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பொதுவான தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (தனிப் பொறுப்பு) புவி அறிவியல் அமைச்சகம்(தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியங்கள் , அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதுதில்லி நார்த் பிளாக்கில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் , இந்திய பொது நிர்வாக நிறுவனம் , சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனம் , கிரித் கல்யாண் கேந்திராக்கள் , குடிமைப்பணி சேவைகள் கலாச்சார, விளையாட்டு மத்திய வாரியம் ஆகியஆறு தன்னாட்சி அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த அமைச்சர், துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது. ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும் என்று கூறினார்.
முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827415
**********
(Release ID: 1827427)
Visitor Counter : 426