மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம் – திரு. தர்மேந்திர பிரதான்
Posted On:
21 MAY 2022 2:28PM by PIB Chennai
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் இன்று, பயிற்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் சர்வதேச கூட்டமைப்பான IFTDO-வின் 49-வது சர்வதேச மாநாடு & கண்காட்சியின் நிறைவு விழா உரையாற்றினார். சுறுசுறுப்பான வேலை கலாச்சாரத்திற்கான செயல்திட்டம்: புதிய யுகத்திற்கான பாதைகள் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.
விழாவில் பேசிய அமைச்சர், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில், செயல்பாட்டாளராகவும், இடையூறு செய்பவராகவும் தொழில்நுட்பம் திகழ்வதாகக் கூறினார். உலகம், அதிவிரைவாக மாறிவருவதைக் கருத்திற்கொண்டு, முழுமையான திறன் செயல்திட்டம் வாயிலாக, 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, நமது தொழிலாளர் வர்க்கத்தினரை தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், அனைத்துத் துறைகளிலும் திறன் உருவாக்கத்திற்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். திறன் உருவாக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை கண்டறிவதில், இந்திய திறன் உருவாக்க ஆணையத்தின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்விக்கும் திறன் பயிற்சிக்குமிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதில் அதன் செயல்திறன் பற்றிக் குறிப்பிட்ட திரு.பிரதான், 3 முதல் 23 வயது வரையிலான மாணவர்களின் முறையான கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை பூர்த்தி செய்வதாகக் கூறினார். நாமும், புதிய சிந்தனைகள், திறன் பயிற்சியில் புதுமையான செயல்முறை, மறுதிறன் பயிற்சி மற்றும் முறையான கல்விமுறையில் படிக்காதவர்களுக்கான மறுதிறன் பியற்சிகளை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
***
(Release ID: 1827192)
Visitor Counter : 179