ரெயில்வே அமைச்சகம்
வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பை திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்
சென்னை இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலை, எழும்பூர் ரயில் நிலையத்திலும் அமைச்சர் ஆய்வு
Posted On:
20 MAY 2022 4:45PM by PIB Chennai
சென்னை இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில், உள்நாட்டு தயாரிப்பான வந்தே பாரத் ரயில்கள் உருவாவதை ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர், ஊழியர்களிடம் கலந்துரையாடி பணிகளை உற்சாகத்துடன் செய்யுமாறு ஊக்குவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சென்னை ஐசிஎஃப்-ல் வந்தே பாரத் துரித கதியில் உற்பத்தி செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில் 12,000-வது எல்எச்பி பெட்டியை கொடியைசைத்து திரு ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார். இந்தவகை பெட்டிகள் பாதுகாப்பானதாகவும், இலகுவானதாகும், மிகவும் வசதி கொண்டதாகவும், அதிர்வை தாங்கக்கூடியதாகவும் உருவாக்கப்படுகின்றன. ஐசிஎஃப்-ல் உருவாக்கப்படும் வழக்கமான பெட்டிகளுக்கு மாற்றாக இந்தப் பெட்டிகள் படிப்படியாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே அமைச்சர் தமது சென்னைப் பயணத்தின் போது 19-ம் தேதி இரவு நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர், எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டு பெருந்திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ரயில்வேயை மாற்றியமைக்கும் தொலைநோக்குப் பார்வை பிரதமரிடம் உள்ளதாகவும், எழும்பூர் ரயில் நிலையம் பழமை மாறாமல், அதிக வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தெற்கு ரயில்வேயின் இரண்டாவது பெரிய முனையமான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்தை போன்ற வசதிகளுடன் தனித்தனி வருகைப்புறப்பாடு தாழ்வாரங்கள், பிரகாசமான ஒளி அமைப்பு, நடைமேடைகளுக்கு இடையூறு இன்றி செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், ஸ்கைவாக் ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826957
*********
(Release ID: 1827033)
Visitor Counter : 244