குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய சமூகம், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிறேனடடீன்களில் உள்ள இந்திய நண்பர்களுக்கு குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் உரை.


செயின்ட் வின்சென்ட் மற்றும் கிறேனடடீன்னில் உங்களை நான் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

உங்கள் இந்திய சகோதர, சகோதரிகளின் வாழ்த்துக்களை என்னுடன் எடுத்து வந்துள்ளேன்.

உங்கள் அழகிய நாட்டில் கால் வைத்தது முதலே நானும், என்னுடைய குழுவும் மிகுந்த அரவணைப்பும், அன்பும் பெற்று வருகிறோம். நீங்கள் சிறப்பு மிக்கவராக எங்களை உணரவைத்துள்ளீர்கள். உங்களில் விருந்தோம்பலுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

Posted On: 20 MAY 2022 10:59AM by PIB Chennai

நண்பர்களே,

கடந்த 42 வருடங்களில், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிறேனடடீன் மக்கள்  மக்களாட்சி, பன்மைத்தன்மை, பல்வேறு இனம் கொண்ட சமூகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சிறிய நாட்டின் பொருளாதார சாதனைகள் பாராட்டத்தக்கது. தொலைநோக்கு பார்வையுள்ள தலைவர்களின் வழிகாட்டுதலால் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிறேனடடீன் மக்கள்  இந்த சிறிய தீவை கரீபியன்னில் அமைதி  மற்றும்  செழிப்பு மிக்க தீவாக மாற்றியுள்ளனர்.

இந்திய சமூகத்தினர் இந்த நிலத்தை தங்களது நிலம் போல ஏற்றுக்கொண்டதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் அடுத்த சமூகத்தினர்களுடன் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்த்து வருகின்றனர் மேலும் எஸ் வி ஜி யின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்அவர்களின் நேர்மறையான அணுகுமுறையால் இந்திய வம்சாவளியினர் எஸ் வி ஜி யின் மதிப்பையும், அன்பையும் பெற்றுள்ளனர். ஜூன் 1 ஆம் நாளை இந்தியன் வருகை தினமாக அறிவித்ததும், அக்டோபர் 7 ஆம் நாளை இந்திய பாரம்பரிய நாளாக அறிவித்ததில் இருந்து இந்த நாடு இந்தியாவுடன் எவ்வளவு இணைக்க பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறதுகால்டெர் சாலையை  "இந்தியா டிரைவ்" என மறுபெயரிட்ட சின்னதை திறந்து வைக்கும் பொழுது இந்திய சமூகத்திற்கும் எனக்கும் ஒரு பெருமையான தருணம்.

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிறேனடடீன் உடனான வளர்ச்சிக்கான கூட்டமைப்பு உலகளாவிய சகோதரதுவத்தை  அடிப்படையாகக் கொன்டது. நாங்கள் இங்குள்ள எங்களது சகோதர, சகோதரிகளை ஆதரிக்க விரும்புகிறோம்புதிய இந்தியா அதன் விரவான பொருளாதார வளர்ச்சியில் உங்கள் அனைவரையும் இணைக்க விரும்புகிறோம்.

இந்திய வம்சாவளியினருக்கும், இங்கு வாழும் இந்தியர்களுக்கும் மீண்டும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இந்தியாவின் சிறப்பான பன்முகத்தன்மை, பாரம்பரியமிக்க கலாசார மற்றும் மரபை வெளிப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்கள் சாதனைகளுக்காக பெருமைகொள்கிறோம்.

நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் செழிப்பு மிகுந்து, அமைதியும், நல்ல உடல்நலம் பெற்று வாழ வாழ்த்துக்கள்இந்தியாவிற்கு சுற்றுலா வரும் இந்நாட்டு மக்களை வரவேற்க எதிர்நோக்கி இருக்கிறோம், அது தான் இந்தியா.

நன்றி

ஜெய் ஹிந்த்

******



(Release ID: 1826910) Visitor Counter : 135