அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கடந்த இரண்டே ஆண்டுகளில் விண்வெளித் துறையைச்சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 18 MAY 2022 6:05PM by PIB Chennai

கடந்த இரண்டே ஆண்டுகளில் விண்வெளித் துறையைச்சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் 55 புதிய தொழில்கள் பதிவு செய்திருப்பதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நான்காவது கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த 55 புதிய தொழில்களில் 29 செயற்கை கோள் சம்பந்தப்பட்டவை, 10 விண்வெளி பயன்பாடு மற்றும் உற்பத்தி பொருட்கள், 8 செலுத்துவாகனம் சம்பந்தப்பட்டவை, 8 புவிசார் நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சி என்றும் அவர் கூறினார். இவற்றில் 9 திட்டங்கள் 2022 -23க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டுப் பெருவிழாவை குறிக்கும்  வகையில் 75 மாணவர்களின் செயற்கை கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவில் நடைபெற உள்ள மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் மாநாட்டிற்கான நகல் நிகழ்ச்சி நிரல் பற்றியும் டாக்டர் ஜிதேந்திர சிங் முழுமையாக ஆய்வு செய்தார். முதன் முறையாக நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டின் நிகழ்விடம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், விண்வெளி துறையின் செயலாளர், புவி அறிவியல் அமைச்சக செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826421

***************


(Release ID: 1826476)
Read this release in: English , Urdu , Marathi , Hindi