சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயர்நீதிமன்றங்களுக்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

Posted On: 14 MAY 2022 3:22PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 224-இன் உட்பிரிவு (1) அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, பின்வருபவர்களை உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். 14.5 2022-ன் அறிவிக்கையின்படி, அவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து அவர்களது பதவிக்காலம் செயல்பாட்டுக்கு வருகிறது.

நீதித்துறை அலுவலர்களான திருமிகு அனன்யா பந்தோபாத்யாயா, திருமதி ராய் சட்டோபாத்யாயா, திரு சுபந்து சமந்தா ஆகியோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர் சச்சின் சிங் ராஜ்புத், சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், வழக்கறிஞர் திருமதி ஷோபா அன்னம்மா ஈபன், கேரள உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


(Release ID: 1825370) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Punjabi