அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
லடாக் இமயமலைப்பகுதியில் சுமார் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான அரியவகை பாம்பு புதைபடிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
प्रविष्टि तिथि:
13 MAY 2022 3:56PM by PIB Chennai
லடாக் இமயமலைப்பகுதியின் மொலாஸ் படிமங்களில் இருந்து ஒரு மேட்சோயிடே என்னும் அரியவகை பாம்பின் புதைபடிமத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளனர். முன்பு எண்ணியிருந்ததை விட, மிக நீண்ட காலத்திற்கு முன்பு துணைக்கண்டத்தில் இந்த பாம்பு இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
மட்சோயிடே என்பது அழிந்துபோன நடுத்தர அளவு முதல் பிரம்மாண்டமான அளவு கொண்ட பாம்பு வகையாகும். இது முதலில் கிரெட்டேசியஸின் பிற்பகுதியில் தோன்றி, பின்னர் கோண்ட்வானன் நிலப்பகுதிகளில் பரவியதாக கருதப்படுகிறது.
உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் ஈசீன்-ஒலிகோசீன் எல்லையில் உள்ள முக்கிய உயிரியல் மறுசீரமைப்பு (இது ஐரோப்பிய கிராண்டே கூப்பூருடன் தொடர்புடையது), இந்தியாவில் இந்த முக்கியமான பாம்புகளின் அழிவுக்கு காரணமாக இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாம்பின் மாதிரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான வாடியா நிறுவனத்தின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825096
***************
(रिलीज़ आईडी: 1825154)
आगंतुक पटल : 280