குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
என்எஸ்ஐசி-எம்எஸ்எம்இ அமைச்சகம் மெகா வேலைவாய்ப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு
प्रविष्टि तिथि:
13 MAY 2022 1:23PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள என்டிஎஸ்சி-ல் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு கண்காட்சியை எம்எஸ்எம்இ செயலர் திரு பி பி ஸ்வைன் இன்று தொடங்கிவைத்தார்.
பல்வேறு படிப்புகளை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், முன்ஜால் ஷோவா (ஹீரோ ஹோண்டா குழுமம்) ஜேவிஎம் குழுமம், எஸ்பிஎம் ஆட்டோ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்கள் இதி்ல் கலந்து கொண்டன.
இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த தேசிய சிறுதொழில்கள் கழகம் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தை திரு பி பி ஸ்வைன் பாராட்டினார். எம்எஸ்எம்இ கூடுதல் செயலர் திரு சைலேஷ்குமார் சிங், என்எஸ்ஐசி-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திருமிகு அல்கா அரோரா ஆகியோரும் உரையாற்றினார்கள்.
தேசிய சிறுதொழில்கள் கழகம் தொடர்ச்சியாக பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக 70,000க்கும் மேற்பட்ட பழகுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825036
***************
(रिलीज़ आईडी: 1825099)
आगंतुक पटल : 233