சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அடல் கண்டுபிடிப்பு இயக்கம் – பிரைம் (கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம், சந்தை ஆயத்தம் மற்றும் தொழில்முனைவு)-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தொடங்கி வைத்தார்
Posted On:
10 MAY 2022 4:59PM by PIB Chennai
அடல் கண்டுபிடிப்பு இயக்கம் – பிரைம் (கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம், சந்தை ஆயத்தம் மற்றும் தொழில்முனைவு) மற்றும் ஸ்டார்ட்அப் கண்காட்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பாரதி பிரவீன் பவார், மாறுபட்ட சிந்தனைகளை மத்திய அரசு அங்கீகரித்தன் காரணமாகவே, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை தொடங்கியிருப்பதாக கூறினார். இந்த திட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் துறைகளை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில், மருத்துவ சாதனங்கள், நோய் கண்டறிதல், புரதம் அடிப்படையிலான உயிரியல், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா பெரும் ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆராய்ச்சி சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் சொத்துக்களை உருவாக்குவதில், தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவது அவசியம் என்றும் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.
கொவிட் பெருந்தொற்று பாதிப்பின் போது, நாட்டின் கண்டுபிடிப்பு
சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வந்ததாக தெரிவித்தார். பெருந்தொற்று காலத்தில் சுகாதார சேவை முக்கிய இடம்பெற்ற நிலையில், நோய் கண்டறிதல், முழு உடல் கவச உடை தயாரிப்பு, வெண்டிலேட்டர் தயாரிப்பு மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறினார். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824186
***************
(Release ID: 1824203)
Visitor Counter : 167