நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தி 29% அதிகரித்து, ஏப்ரல் 2022-ல் 66.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
10 MAY 2022 3:39PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளி விவரங்களின்படி மொத்த நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2021-ல் 51. 62 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் 29% அதிகரித்து ஏப்ரல் 2022-ல் 66.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
கோல் இந்தியா நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் மற்றும் கேப்டிவ் மைன்ஸ் போன்ற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 37 முக்கிய நிலக்கரி உற்பத்தி சுரங்கங்களில், 22 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கு மேலாகவும், 10 சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீதமும் உற்பத்தி செய்துள்ளன.
மின்சார உற்பத்திக்காக அனுப்பி வைக்கப்படும் நிலக்கரியின் அளவும், 18.15% அதிகரித்து ஏப்ரல் 2022-ல் 61.81 டன்னை எட்டியுள்ளது. நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தியும் ஏப்ரல் 2021-உடன் ஒப்பிடுகையில், 9.26 % அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணலாம்.https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824154
***************
(रिलीज़ आईडी: 1824191)
आगंतुक पटल : 221