சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சிக்கும், மாசு இல்லாத சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்

Posted On: 08 MAY 2022 5:37PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், இன்று மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நீதித்துறை: தேசிய மற்றும் சர்வதேச கண்ணோட்டம் பற்றிய மாநாட்டில் உரையாற்றினார்.

 

சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை என்பது சுற்றுச்சூழல் நிலைமைகளில் உள்ள வேறுபாடுகளுடன் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையிலான உயிரினங்களின் கலவையின் கருத்தாகும் என்று அமைச்சர் கூறினார்.

 

1992 ரியோ பிரகடனத்தின் கீழ் நமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியா ஒரு வலுவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைக் கொண்டுள்ளது என்று திரு. யாதவ் குறிப்பிட்டார் . உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டை எழுத்திலும் உணர்விலும் செயல்படுத்தும் உலகின் சில நாடுகளில் இன்று நாம்  இருக்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.

 

இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது (இரண்டு டன்கள்) எனவே மேற்கத்திய தொழில்மயமான நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நிதிச் சுமையின் பெரும்பகுதியைச் சுமக்க வேண்டும் என்றார்.

 

நமது  பிரதமர் நரேந்திர மோடித் தலைமையின் கீழ் பாரிஸில், இந்தியா நிலையான வாழ்க்கை முறைகள் மற்றும் காலநிலை நீதிக்கான கருத்தை வழங்கியது, இவை இரண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தின் முன்னுரையில் இடம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

 

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காடுகளை சார்ந்து வாழும் சமூகங்களை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

2018 ஆம் ஆண்டில், 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடித்தல்' என்ற கருப்பொருளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்தியது. பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உலகளாவிய அழைப்பை விடுத்தார். இந்தியாவின் இந்த அழைப்பு உலகெங்கிலும் உள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டின் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கைக்கு வழிவகுத்தது என்றும் அமைச்சர் கூறினார்.

 

மேலும், இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1823661

*********


(Release ID: 1823676) Visitor Counter : 218