சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு உதவவுள்ள தன்னார்வலர்களுக்குன பயிற்சியை மத்திய அமைச்சர் நக்வி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
07 MAY 2022 2:31PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸில் “காதிம் உல் ஹுஜ்ஜாஜ்” எனும் இரண்டு நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த "காதிம்-உல்-ஹுஜ்ஜாஜ்" மக்கா-மதீனாவில் உள்ள இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ உள்ளது. யாத்ரீகர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு மத்திய அமைச்சர் திரு நக்வி இந்த அமைப்பை வலியுறுத்தியுள்ளார். இந்த 2 நாள் பயிற்சி முகாமில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் 12 பெண் பயிற்சியாளர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொள்வார்கள். மக்கா-மதீனாவில் உள்ள ஹஜ் யாத்ரீகர்களின் தங்குமிடம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உட்பட, ஹஜ் தொடர்பான அனைத்து செயல்முறைகளும் விரிவாக அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும். இந்திய ஹஜ் கமிட்டி, பிரிஹான் மும்பை நகராட்சி, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், மருத்துவர்கள், விமான நிறுவனங்கள், சுங்கம் மற்றும் குடியேற்றத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இவர்களுக்கு இரண்டு நாட்களில் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
79,237 இந்திய முஸ்லீம்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். இதில் 50 சதவீத பெண்களும் அடங்குவர். இவர்களில் 56,601 இந்திய முஸ்லிம்கள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 22,636 முஸ்லிம்கள் ஹஜ் பயணக் குழு அமைப்பாளர்கள் மூலமாகவும் (HGOs) செல்வார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், ஹஜ் யாத்ரீகர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களுடன் ஹஜ் 2022 பயண ஏற்பாடு நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான முழு ஹஜ் செயல்முறையும் இந்திய அரசு மற்றும் சவுதி அரேபியா அரசாங்கத்தின் முழுமையான வழிகாட்டுதல்களுடன் நடந்து வருவதாக அவர் கூறினார். தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1498 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823472
****
(रिलीज़ आईडी: 1823531)
आगंतुक पटल : 297