குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக “கயிறு பொருட்களுக்கான ஓட்டம்” கோயம்புத்தூரில் நடைபெற்றது
மத்திய அமைச்சர் திரு நாராயண ரானே கொடியசைத்து தொடங்கிவைத்தார்
Posted On:
06 MAY 2022 5:32PM by PIB Chennai
இயற்கையானது, மட்கக் கூடியது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால், கயிறு பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ‘தொழில்கள் இந்தியா’ என்ற மையக் கருத்துடன் “கயிறு பொருட்களுக்கான ஓட்டம்” இன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இந்த ஓட்டத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண ரானே கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தத் துறைக்கான இணை அமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா, கயிறு பொருட்கள் வாரிய தலைவர் திரு குப்புராமு உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர், கல்லூரி மாணவர்கள் – ஆடவர் மற்றும் மகளிர், பொதுப்பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர் என நான்கு வகைகளில் இந்த ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2000-க்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த நிகழ்வு, வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு வகையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் திரு பானுபிரதாப் சிங் வர்மா வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823276
------
(Release ID: 1823342)
Visitor Counter : 152