அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அனைவருக்கும் தடுப்பூசி எளிதில் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 06 MAY 2022 3:20PM by PIB Chennai

அனைவருக்கும் தடுப்பூசி எளிதில் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதை  விலையை உறுதி செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஐநா சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்களின் 7-வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலக சுகாதார நிறுவனத்தின் சமபங்கு கோட்பாட்டை இந்தியா வலுவாக ஆதரிக்கிறது என்றார். கொவிட் தடுப்பூசிகள், நோய் கண்டறிதல், மருந்துகள் ஆகியவற்றுக்கு உலக சுகாதார நிறுவனத்தில் தென்னாப்பிரிக்காவுடன் சேர்ந்து அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களை நீக்குவதற்கான யோசனையையும் இந்தியா முன்வைத்துள்ளது என்றார். தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு  சக்திக்கான உலகளாவிய கூட்டணி, உலக சுகாதார நிறுவனம், கொவிட்-19  உபகரணங்கள் எளிதாக கிடைத்தல் இந்த இலக்கு எட்டப்படுவதை துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா தீவிரமாக  பணியாற்றி வருவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களை  எதிர்கொள்ளும் உலகாளவிய  முயற்சி பற்றி குறிப்பிட்ட அமைச்சர், தடுப்பூசி ஆராய்ச்சியில் சர்வதேச அறிவியல் கூட்டணியில் முன்னணி உறுப்பினராக இந்தியா உருவாகியுள்ளது என்றார். வலுவான மருந்து உற்பத்தி  தொழில்துறையின் ஆதரவுடன் நமது   அறிவியல் சமூகம்  டிஎன்ஏ அடிப்படையிலான உலகின் முதலாவது தடுப்பூசி உட்பட பாதுகாப்பான விலை குறைவான, நல்ல செயல் திறனுடைய தடுப்பூசிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகத்திலிருந்து கொவிட்-19 நோயாளிகள் குறித்த தரவுகளை வெளிப்படுத்துவதில், இன்னமும் நாம் பின்தங்கியிருக்கிறோம் என்று அமைப்பின் உறுப்பினர்களை எச்சரித்த அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தரவுகளைத் தொகுத்து அறிவை பகிர்ந்து கொள்வதில் அர்த்தமுள்ள பங்குதாரராக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்கொவிட்-19- எதிர்கொள்ளவும், நீடித்த வளர்ச்சியை நோக்கி செல்லவும், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த உணர்வுடனான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823231

-----



(Release ID: 1823258) Visitor Counter : 149