வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும் என்று திருமதி அனுப்பிரியா பட்டேல் வலியுறுத்தியுள்ளார்
Posted On:
05 MAY 2022 5:19PM by PIB Chennai
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் வலியுறுத்தியுள்ளார். முதலாவது பிஃக்கி தொழில் 4.0 விருது வழங்கும் விழா மற்றும் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அமைச்சர், தொழில்துறைக்கு அரசின் ஆதரவு உள்ளது என்றும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு இந்த தொழில் புரட்சி 4.0வை கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
4-ம் தொழில்புரட்சியை நாம் அனைவரும் சேர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கூறிய திருமதி அனுப்பிரியா பட்டேல், பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் விநியோக சங்கிலிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் என்றும், பெருவாரியான வாய்ப்புகள் நமக்கு முன்னால் உள்ளது என்றும் கூறினார்.
மூன்று தொழில்புரட்சிகளுக்கு பின்னர் நான்காவது தொழில் புரட்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறிய அவர், உற்பத்தித்திறனை அதிகரிக்க அனைத்து மட்டத்திலும் ஆட்டோமேஷன் மற்றும் தரவு பரிமாற்றத்தின் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822975
***************
(Release ID: 1823042)
Visitor Counter : 170