பிரதமர் அலுவலகம்

2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாடு

Posted On: 04 MAY 2022 7:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டில், டென்மார்க் பிரதமர் மெட்டெ ஃபிரடெரிக்சென், ஐஸ்லாந்து பிரதமர் ஜாக்கப்ஸ்டார்ட்டிர், நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர், சுவீடன் பிரதமர் மக்தலேனா ஆண்டர்சென் மற்றும் பின்லாந்து பிரதமர் சனா மரீன் ஆகியோருடன் இணைந்து கலந்துகொண்டார். 

ஸ்டாக்ஹோமில் 2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்கு பிறகு, இந்தியா – நார்டிக் உறவுகளில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இந்த மாநாடு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, புதுமைகண்டுபிடிப்பு, டிஜிட்டல் மயமாக்கல், மற்றும் பசுமை மற்றும் தூய்மையான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

நீடித்த ஆழ்கடல் மேலாண்மைக்கு சிறப்புக் கவனம் செலுத்தும்விதமாக கடல்சார் ஒத்துழைப்புக் குறித்த விவாதங்களும் இடம் பெற்றது. நீல பொருளாதாரத் துறையில், குறிப்பாக, இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு நார்டிக் தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள நார்டிக் பிராந்தியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஆர்டிக் கொள்கை, இந்தியா – நார்டிக் ஒத்துழைப்பை  ஆர்டிக் பிராந்தியத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான சிறப்பான கட்டமைப்பை வழங்கியிருப்பதாக பிரதமர்  தெரிவித்தார்.

நார்டிக் நாடுகளின்  நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார். 

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உச்சி மாநாட்டிற்கு பிறகு கூட்டறிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டறிக்கையின் முழு விவரங்களை இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணலாம்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822725

-------



(Release ID: 1822748) Visitor Counter : 295